India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் ஆதரவற்ற மூதாட்டியின் ஒருவரின் வீடு இடிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டின் சுவர் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்ததால் மூதாட்டி உயிர் தப்பினார். இந்நிலையில், கூலி வேலை செய்துவரும் ஆதரவற்ற மூதாட்டிக்கு வீட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானிய திட்டங்கள், மானியத்தில் வழங்கப்படும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!
திண்டுக்கல் கிழக்கு பாலகிருஷ்ணாபுரம் கரூர் ரயில்வே கேட் இன்று வருடாந்தர ரயில்வே பணிக்காக காலை 08.00 முதல் மாலை 06.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகர் பாப்புலர் நகர் சந்துரு நகர் மாசிலாமணிபுரம் மக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு தென்னக ரயில்வே பொதுமக்களிடம் கேட்டுகொள்கிறது .
#திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
#பழனி மலையடிவாரத்தில் 350 கடைகளுக்கு நோட்டீஸ்
#முதலமைச்சர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
# திண்டுக்கல்லில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
திருச்சியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானலில் சுற்றுலா சென்றபோது BARBEQUE சிக்கன் சமைத்த அடுப்பு கரி புகையால் 2பேர் பலி எனத் தகவலையடுத்து கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் சமைப்பதற்கு அடுப்பு கரிகட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதன் மூலம் வரும் புகை மூளை மற்றும் இதயத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டமானது ஆறாம் கட்டமாக வருகிற 21-ம் தேதி நிலக்கோட்டை வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இம்முகாம் நடைபெறும் நாளில் பொதுமக்கள் மனு அளித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெற,மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி, மாவட்ட தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோஜி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமையில் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு, போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலமானது தலைமை தபால் நிலையம் வழியாக பேருந்து நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சிலை வழியாக சென்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டியில் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது. விளையாட்டு அரங்கத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.