Dindigul

News August 14, 2024

இஸ்ரோவுக்கு செல்லும் திண்டுக்கல் மாணவி!

image

திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி இறைமலர், கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி நடத்திய, தேசிய அளவிலான ஆன்லைன் விண்வெளி வினாடி வினா போட்டியில் பங்கேற்றார். இதில், 28வது இடம் பெற்று அவர், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) நாளை சுதந்திர தினத்தன்று நடக்கும், விண்வெளி ராக்கெட் ஏவுகணை ஏவும் நிகழ்ச்சிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News August 14, 2024

திண்டுக்கல்லில் தாசில்தார்கள் இடமாற்றம்

image

நத்தம் தாசில்தார் சுகந்தி, திண்டுக்கல் வளநிர்ணயத்திட்ட தனி தாசில்தாராகவும், முத்திரைத்தாள் தனி தாசில்தார் சரவணக்குமார், நத்தம் தாசில்தாராகவும், திண்டுக்கல் வளநிர்ணயத்திட்ட தனி தாசில்தார் முத்துராமன், தேர்தல் தனி தாசில்தாராகவும், அதே பொறுப்பில் இருந்த சு.சரவணன் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை கலெக்டர் பூங்கொடி நேற்று பிறப்பித்துள்ளார்.

News August 14, 2024

திண்டுக்கல் மாநகராட்சி செயற்கை நீருற்று சுத்தம்

image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக நுழைவு பகுதியில் செயற்கை நீருற்று உள்ளது. இது விழாக்காலங்களில் மட்டும் பயன்பாட்டிலிருக்கும். மற்ற நேரங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும். இதனால் இங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில், கமிஷனர் ரவிச்சந்திரன் செயற்கை நீருற்றை ஆய்வு செய்து, உடனே சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி சுகாதார பணியாளர்கள் செயற்கை நீருற்றை நேற்று சுத்தம் செய்தனர்.

News August 14, 2024

திண்டுக்கல்: போதையில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்

image

கேரளாவை சேர்ந்த நாசு, முகமது மாஸ், கிறிஸ்டி ஆகிய வாலிபர்கள் நேற்று கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அப்போது, மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், முகமது மாஸுக்கு கையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த போது, ஆத்திரமடைந்த நாசு என்பவர், மருத்துவமனை கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். இதுகுறித்து தற்போது கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 14, 2024

முதலமைச்சர் கோப்பை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, தொடர்பாக மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2024

திண்டுக்கல் இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பழனி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை.
➤ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் நாளை மாவட்ட அளவிலான தேசிய தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
➤குரும்பபட்டியில் பெற்றோர்கள் கண்டித்ததால் மகள் தற்கொலை.
➤திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
➤கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் வருகை

News August 13, 2024

கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் வருகை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு வந்த 98 நாட்களில் 1 லட்சம் வாகனங்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா வந்துள்ளனர். இதனை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் மே 7-ம் தேதி தொடங்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 13, 2024

பழனி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

image

நாட்டின் 78 வது சுதந்திர தினம் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பெயரில் பழனி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமையை சோதனை செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மலைக்கோயில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News August 13, 2024

திண்டுக்கல்: மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

image

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இன்று மற்றும் நாளை 14.08.2024 ஆகிய 2 நாட்கள், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் மாவட்ட அளவிலான தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் – 2024 கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தேனீ வளர்ப்போர், தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், தேனிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து பயிற்சி பெறலாம்.

News August 13, 2024

திண்டுக்கல்: 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டை குரும்பபட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது 15 வயது மகள் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் அவரது தாயார் கண்டித்ததால், மனம் உடைந்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!