India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகராஜன், பொருளாளர் திருலோசந்திரன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் பிளாட் எண்.2, பாண்டியன் நகர், முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல்-624001 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக-19 முதல் செப்-6 வரை நடைபெறவுள்ளது, என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிக கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விடியல் பயண திட்டத்திற்காக 200 பேருந்துகளும், தேனி மாவட்டத்தில் 109 பேருந்துகள் என மொத்தம் 309 நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், விடியல் பயண திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து பயண சேவையின் மூலம் தற்போது வரை திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 33 கோடி முறை மக்கள் பயனடைந்து இருப்பதாக திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (17/08/2024) சனிக்கிழமை, (19/08/2024) திங்கட்கிழமை, (20/08/2024) செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் நேரடியாக பங்கேற்று மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 17-08-2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு நகர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யும் பகுதிகளான திண்டுக்கல் மாநகர் பகுதி முழுவதும், செட்டி நாயக்கன்பட்டி, சென்னம்மாநாயக்கன்பட்டி, என் எஸ் நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.
அய்யலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.1 ஆடு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. ஆடி மாதம் கடைசி என்பதால் ஆடுகள் அதிகளவில் 3 கோடிக்கு விற்பனையானது. விலை அதிகரித்தால் ஆடு விற்பனைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆக.16 நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் மக்களால் ‘ஜீப் மனிதர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஹெரால்டு (80) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹெரால்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று (ஆக.14) புதன்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.