India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அருகே பாலசமுத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இஸ்லாமிய மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரது உடலை விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த கோவில் வழியாக கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடலை கொண்டு சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் போட்டிகள் வருகிற 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. வருகிற 25ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ.5ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ. 3,500 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் இளநிலை உதவியாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த திண்டுக்கல் வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பேருந்து நிலையத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் தனியார் பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் ஹாஸ்டல் மாணவி ஒருவரும், தினசரி பள்ளி செல்லும் மாணவி ஒருவரும் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது ஆறாம் கட்டமாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் வரும் 18.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதை முன்னிட்டு 11.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது குறைகள் சார்ந்த மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையையும், உதவித் தலைமை ஆசிரியரையும் பணியிட மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டார். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு புகார்களை அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியை வனிதாவையும், உதவித் தலைமை ஆசிரியர் சேது முருகனையும் பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
கொடைக்கானல் வட்டம், கே.சி.பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவச்சான்று வழங்கும் சிறப்பு முகாம் கே.சி.பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10.09.2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து விபத்துக்கள், தற்கொலைகள் என மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. மேலும், அதிகப்படியான பொதுமக்கள் காணப்பட்டு வருவதால் மருத்துவமனை வளாகம் சோகத்தில் மூழ்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை (செப்-10) முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரை 7401703504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரையை சேர்ந்தவர் செல்லம் (19). இவரும் திண்டுக்கல்லை சேர்ந்த சிறுமியும் (17) காதலித்தனர். நேற்று இருவரும் சந்தித்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செல்லம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சிறுமியை சுட்டார். இதில் சிறுமிக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. பின் செல்லம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.