Dindigul

News March 29, 2024

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு 

image

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.

News March 28, 2024

திண்டுக்கல் பணி நிறைவு பாராட்டு விழா

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024 தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் D.சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் C.மைக்கேல் டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் G.குமாரபாண்டியன் , உட்பட மாவட்ட காவல் எஸ்.பி பிரதீப், நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News March 28, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

திண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் அறிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் கயிலை ராஜனை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

பழனி கிரிவல பாதை வழக்கு: மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை பொதுநல வழக்கை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுரேஷ்குமார் அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் மதுரை நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையில் ஆர் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இனி கிரிவலப் பாதை வழக்கை விசாரிக்கும். மேலும் கிருஷ்ணகுமார் நீதிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

திண்டுக்கல்: 17 மனுக்கள் நிராகரிப்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என – 35 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 18 மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் , 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு ஏற்பு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் மனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் இளைய குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News March 28, 2024

மது விற்ற 16 பேர் கைது

image

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்ற காளிமுத்து (35), சுப்பிரமணி (44) ஜெயா (48), ரவீந்திரன் (65), திருமுருகன் (29), கார்த்திக் (42), பழனிச்சாமி (70), ராஜ்குமார் (32), ஜெயா (48) உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 191 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

News March 28, 2024

ஆன்லைனில் ப‌ண‌ மோச‌டி: 7 பேர் கைது

image

டைக்கானலுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு இன்ப‌ சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ப‌ரிசு கூப்பன்களை காட்டி கூப்ப‌ன்க‌ளில் ப‌ரிசு விழுந்தால் வ‌ருட‌த்திற்கு 7 நாட்கள் வீத‌ம் 10 வ‌ருட‌த்திற்கு 70 நாட்க‌ள் உல‌க‌த்தில் எந்த‌ மூலையில் வேண்டுமானாலும் த‌ங்க‌லாம் என‌ கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேரை கைது செய்துள்ளனர்.

News March 28, 2024

ஏப்., 1ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்

image

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப். 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

நூதன முறையில் வாக்கு சேகரித்த ஐ. பெரியசாமி!

image

திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி முருகபவனம் பகுதிகளில் நேற்று சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம் என்றார்.