Dindigul

News March 30, 2024

மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

image

பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். மலை மீது ரூ.100 கட்டணம் தரிசன வழியில் இரண்டு மணி நேரமும் நேரமும், கட்டணமில்லா பொது தரிசனம் வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

News March 30, 2024

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா

image

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.12 முதல் 23 வரை நடைபெறுகிறது. ஏப்.12 கொடியேற்றத்துக்குப்  பின், ஒவ்வொரு நாள் மாலையும் சுவாமி அம்பாளுடன் சிம்மம்கமலம்,அன்னம்,யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21, அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.23 தீா்த்தவாரியுடன் நிறைவடைகிறது.

News March 29, 2024

திண்டுக்கல்: சிறப்பு முன்னுரிமை ரத்து

image

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வரும் நிலையில் பக்தர்கள் அதிகப்படியாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 29, 2024

குப்பை கிடங்கில் பற்றிய தீ

image

பழனி மலை அடிவாரத்தில் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது. சற்று நேரத்தில் தீ முழுவதுமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 29, 2024

திண்டுக்கல்: போதையில் பயணம்: விபரீதம்

image

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெலிங்டன் என்பவர் இன்றுமது அருந்திய நிலையில், தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார் கோட்டை அருகே ரயில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  தகவலறிந்து வந்த இரும்புப் பாதை போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வெலிங்கடனிடம் விசாரணை நடத்தினர்.

News March 29, 2024

திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளனவா என்பதை சோதனை செய்தனர்.

News March 29, 2024

திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர்கள் தெருமுனைப் பிரச்சாரம்

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளான குமரன் திருநகர், ஒய்.எம்.ஆர்.பட்டி, விவேகானந்தா நகர், என்.ஜி. ஓ. காலனி போன்ற பகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.

News March 29, 2024

ரயிலில் வந்த சிறுவன் மீட்பு

image

சென்னை – எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்ததாக கூறியுள்ளான். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

News March 29, 2024

வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை 

image

பழனி ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் தேர்வர்களுக்கு பரிசுத்தொகை,தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 29, 2024

திண்டுக்கல் அருகே குவிந்த பக்தர்கள்

image

பழனி முருகன் கோவிலில் தங்க தேரோட்டம் நேற்று(மார்ச்.28) நடைபெற்றது. சின்னகுமாரர் தங்கத்தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த சில நாட்களாக தங்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.