India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நாளை (செப்.20) நடைபெறுகிறது. கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் சீனிவாசன் (43), இவரது மனைவி செல்வராணி (32). இவரது தங்கை ஹேமலதா, உறவினர் புனிதா (49) ஆகியோர் திருவண்ணாமலை சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பினர். திண்டுக்கல்-திருச்சி ரோடு சீலப்பாடி அருகே நேற்று அதிகாலை 1 மணிக்கு வந்தபோது ரோட்டோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் புனிதா இறந்தார். மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப்.20) நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், டெலிகிராம் செயலியில் இணைந்து கொண்டும் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55924 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி சிவாலயா யோகா மையம் மாணவர்கள் கொடைக்கானல் புலியூர் மலை உச்சியில் நோபல் உலக சாதனை புரிந்தனர். இதில் 7000 அடி உயரத்தில் 50 மாணவர்கள் 500 வினாடிகளில் 50 ஆசனங்கள் செய்து புதிய சாதனை புரிந்தனர். இதனை சிவாலயா யோகா மையம் நிறுவனர் சிவக்குமார் ஏற்பாடு செய்து நடத்தினார்.
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் பள்ளியில் மாணவர், மாணவிகளிடம் இன்று சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரோஸ்லின் முன்னிலை வகித்தார். மேலும், இதில் சைபர் கிரைம் எஸ்.ஐ. ஈஸ்வரி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ. மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, செம்மடைப்பட்டி அருகே பொட்டிநாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் உள்ள பொது ஓடையில் மர்மமான முறையில் பத்துக்கும் மேற்பட்ட மயில்களை அடையாளம் தெரியாத சிலர் விஷம் வைத்து கொன்று, ஓடையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டி, சுசீந்திரன் மற்றும் போலீசார் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக காவல்துறையில் 2 மாவட்டங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் டிஐஜிக்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இந்தப் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ராமநாதபுரம் டிஐஜியான அபிநவ் குமார் கூடுதலாக திண்டுக்கல் சரகத்தை கவனிக்கிறார். இதனால் மக்கள், போலீசார் ராமநாதபுரம் சென்று பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
பழனி மலைக் கோயிலில் தொடர் விடுமுறை தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஓணம் பண்டிகை, மீலாது நபி திருநாள் தொடர் விடுமுறை காரணமாக, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக் கோயிலில் புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து வருகிறது. திண்டுக்கல்லில் இரு தினங்களுக்கு முன்பு ரூ.40-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.60-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை, பெரிய வெங்காயம் ரூ.60 லிருந்து ரூ.80 வரை விற்பனையானது. சில்லரை வியாபாரக் கடைகளுக்கு வரும்போது ரூ.5 வரை கூடுதலான விலைக்கு விற்பனையானது.
Sorry, no posts matched your criteria.