India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு நாளை முதல் பாம்பார்புரம் வழியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இதில்
6,635 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கவுண்டன்பட்டி என்ற இடத்தில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா என்பவர் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெருமாள்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மதுமோகன், குருக்களையாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தனர்.
நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2ல் இருந்து அரசு பஸ் கடந்த 15ம் தேதி கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்துக் கழக மேலாளர் வழங்கும் அனுமதி கடிதத்தை கண்டக்டர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றவில்லை. இதனால் ஊழியர்கள் சுப்பையா, ஜோசப் மிக்சன் 2 பேரையும் நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் திண்டுக்கல் ஊர்க்காவல் படையில் உள்ளார். இவர் ஊர்காவல் படையை சேர்ந்த 8 பெண்களுக்கு ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பியுள்ளார். அந்தப் புகாரின் பேரில் தமிழ்வாணனை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் மயானம் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல், YMR-பட்டி, வ.உ.சி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திண்டுக்கல் – திருச்சி ரோடு முள்ளிப்பாடி சந்தானவர்த்தினி ஆத்துப்பாலம் அருகே உள்ள முட்புதர் அருகே விஜயகுமார், மணிகண்டபிரபு, விக்னேஷ், நாகராஜ், முத்துக்குமார் ஆகிய 5 பேர் அமர்ந்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டினர். போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிங்ஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான தென் மண்டல கால்பந்து போட்டிகள் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி போட்டியில் திண்டுக்கல் அனுக்கிரக இன்டர்நேஷனல் பள்ளி முதலிடம் பிடித்தது. இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளர் ஸ்ரீதர், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா நேற்று நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிடப்பட்டன. பின்னர் 200 மூட்டை அரிசியில் கறி விருந்து சமைக்கப்பட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் விழாவில் பக்தர்களுக்கு விடிய, விடிய கறிவிருந்து இன்று பரிமாறப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி. இவர் நேற்று வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டை என்ற இடத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.