Dindigul

News April 26, 2024

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பூக்கள்

image

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மே மாதம் நடைபெற உள்ளது. பூங்கா நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அந்த நாற்றுகள் பூக்க தொடங்கி சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. 

News April 26, 2024

வேற்று மொழியில் அரசு பேருந்து

image

திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்குட்பட்ட TN57N2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் வேற்று மொழி பெயர் பலகையுடன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்தது. பொள்ளாச்சி பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் தமிழ் சொற்களுக்கு பதிலாக வேற்று மொழியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

News April 26, 2024

இன்று மி்ன்தடை அறிவிப்பு

image

பழனி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆயக்குடி பீடரில் கொடைக்கானல் சாலை உயர் அழுத்த மின் பாதையில் பாராமரிப்பு பணிகள் இன்று (ஏப்.26) நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை அய்யம்புள்ளி, ஆலமரத்துக்களம், தேக்கம்,தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

ஏப்.27 ல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அணிக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 14, 16 வயது பிரிவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உடையோர் பிறப்பு சான்றிதழுடன் விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையில் ஏப்.27 ல் சீலப்பாடி பிரசித்தி வித்யோதயா பள்ளியில் நடக்க உள்ள வீரர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என செயலாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

பெண்கள் மட்டும் கலந்துகொண்ட திருவிழா

image

பழனி சாலையில் உள்ள இடையபட்டியில் பகவதியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா இன்று 25.04.2024- துவங்கியது. இன்று நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு முகூர்த்த கால் ஊன்றி கோவில் திருவிழாவை துவங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது முக்கியமானதாகும்.

News April 25, 2024

எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு

image

பழனி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் காய்கள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் எலுமிச்சை பழம் வாங்குவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு பழம் ரூ. 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 25, 2024

பழனி: புதிதாக மின்சார வாகனம்

image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி வாகனமும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்று கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலைத்துறை அலுவலர்களும், கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் மின் வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக அதிகப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

14 பேர் மீது வழக்குப் பதிவு  

image

சேவுகம்பட்டி திமுக செயலாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான 62 சென்ட் நிலத்தை தங்கராஜின் கையெழுத்து இல்லாமல் அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் உதவியுடன் மதுரை உத்தங்குடியை சேர்ந்த கிறிஸ்டோபர் சாமுவேலுக்கு திருவள்ளூரை சேர்ந்த பெலிக்ஸ்மார்ட்டின் உள்ளிட்டோர் விற்றுள்ளனர்.  தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சார்பதிவாளர் பாலமுருகன் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

News April 25, 2024

தமிழக முதல்வரை சந்தித்த சிபிஎம் வேட்பாளர்

image

தமிழகமுதலமைச்சர். மு. க. ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்  உடனிருந்தனர்.