Dindigul

News April 27, 2024

கொடைக்கானல் வரும் முதல்வர்

image

முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒருவாரம் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல் : மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி

image

திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி ரோடு வன்னியர் திடலில் பெண்களுக்கான மாநில அளவிலான கபாடி இன்று (27.4.2024) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். காலிறுதியில் வாய்ப்பினை இழந்த அணிகளுக்கும் ஆறுதல் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

கொடைக்கானல் வந்த அண்ணாமலை

image

தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார்.

News April 27, 2024

கொடைக்கானல் வரும் முதல்வர் ஸ்டாலின்

image

நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்திற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஏப்.29 முதல் மே.4 வரை ஓய்வு எடுக்க உள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

நிலக்கோட்டை அருகே பொட்டிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(38). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வத்தலக்குண்டில் இருந்து கொடைரோடு நோக்கி டூவீலரில் சென்றபோது அவ்வழியாக நடந்து சென்றவர் மீது பாலகுருவின் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் பாலகுரு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: இருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது .இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல் அருகே எருது விடும் விழா

image

ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.

News April 27, 2024

திண்டுக்கல்: இன்று ஒருநாள் மட்டும்

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே உள்ள செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024) காலை 9.00-மணி முதல், மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். இது தொரட்பாக அந்த ரயில்வே கேட்டிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 26, 2024

ரெட்டியார்சத்திரம் அருகே எருது விடும் திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கோவில் திருவிழாவில் இன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எருது விடும் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள், மற்றும் அதன் உரிமையாளர்கள் பங்கேற்றனர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியான இதை காண திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் காண வந்திருந்தனர்.

News April 26, 2024

பழனி: உலக சாதனை படைத்த மாணவர்கள்

image

பழனியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தபடியே 30 நிமிடம் யோகாசனம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். தக்சதர்ஷன் , ஹர்னேஷ் , ஆதித்யா   ஆகிய மூவரும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து ஸ்கேட்டிங்கில் யோகா செய்ததற்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. சாதனை மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் பலரும் பாராட்டினர்.