India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாருக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். இதையடுத்து திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பண்டிகை காலம் என்பதால், வாகன ஓட்டிகள் ‘மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்! விபத்தைத் தடுப்போம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களின் அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1. கொடைக்கானல் அருகே பெருமாள்மலை சேர்ந்த பழனியம்மாள் மர்மமான முறையில் உயிரிழப்பு.
2. திண்டுக்கல் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
3. ஒட்டன்சத்திரத்தில் மகளிர் சுய உதவிக் குழு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
4. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
5.சாணார்பட்டி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு
கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (52). இவர் வனப்பகுதிக்குள் சென்று பாசனம் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இப்பெண்மணி இன்று காலை பாம்பார்புரம் வனப்பகுதிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு சமூக இணையதளங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்தில் இருந்து வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகார்களுக்கு சைபர் குற்றப்பிரிவு உதவி எண்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in என தெரிவிக்கலாம்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், திண்டுக்கல் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 96558-64426 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையோர பள்ளத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில். விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் (தற்போது மழைக்காலம் என்பதால் குளம், ஆறு, ஏரி போன்ற பகுதிகளில் செல்வதை தவிர்க்கவும்) போன்ற வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.