India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று திண்டுக்கல் நகர் மற்றும் ஊரகங்களான கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் இரவு ரோந்து காவலர்களின் விவரத்தையும் அவர்களது தொலைபேசி எண்ணையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
➤பழனியில் சூரசம்ஹார விழா ➤ஊராட்சி பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு ➤ஆசை வார்த்தைகள் பேசி உங்கள் பணத்தை பறிக்க வாய்ப்பு ➤தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு ➤முதல்வர் மாநில விளையாட்டு விருது விண்ணப்பிக்க அழைப்பு ➤மாநில தடகள போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக நலன் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முகநூல் பக்கத்தில் சமூக வலைதளங்களில் பல போலியான நபர்கள் வலம் வருகின்றனர். அவர்கள் உங்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி உங்கள் பணத்தை பறிக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தட்டச்சு தேர்வின் முடிவு இன்று வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய ஜூனியர், சீனியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்வுகளுக்கான தட்டச்சு முடிவு இன்று வெளியாகி உள்ளது. இத்தேர்வு முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/ என்ற இணையதளத்தில் காணலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப நகலை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703504 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் . என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பழனியில் கந்த சஷ்டி விழாவின் மிக முக்கிய திருவிழாவாக சூரசம்காரம் நாளை நடைபெற உள்ளதால் சூரபத்மன் பொம்மைகள் தயாரிப்பு நிலையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை மதியம் மலைக்கொழுந்து அம்மனுடன் வேல் வாங்கி முருகன் மலை அடிவாரம் வந்து சூரசம்ஹாரம் செய்வதற்காக சூரபத்மனை ஆங்காங்கே அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அசுர குளம் அழிந்து தர்மம் நிலை காப்பதாக புராணம் கூறப்படுகிறது.
திண்டுக்கல் நைனார் முகமது தெரு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவர் வீட்டில் கடந்த மாதம் 3-ம் தேதி 47 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார்(25), ஆதிஸ்வரன்(29) ஆகிய 2 பேரை இன்று கைது செய்து நகையை மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
Sorry, no posts matched your criteria.