India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று 20-04-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானர். இந்தநிலையில் விவேக் அப்பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விவேக்கை திருப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது
பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
▶️செயல் அலுவலர், அய்யம்பாளையம் பேரூராட்சி: 7824058251
▶️செயல் அலுவலர், வத்தலகுண்டு பேரூராட்சி: 7824058253
▶️செயல் அலுவலர், சின்னாளப்பட்டி பேரூராட்சி: 7824058254
▶️செயல் அலுவலர், எரியோடு பேரூராட்சி: 7824058255
▶️செயல் அலுவலர், நத்தம் பேரூராட்சி:7824058258
▶️செயல் அலுவலர், நிலக்கோட்டை பேரூராட்சி: 7824058260
▶️செயல் அலுவலர், பாளையம் பேரூராட்சி: 7824058261
SHARE பண்ணுங்க!
திண்டுக்கல்: ஒரு பெண்ணுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த வத்தலக்குண்டைச் சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் நேற்று(ஏப்.18) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.