India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 5 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இனிப்பு கடைகள் பேக்கரிகள், என சுமார் 40 டன் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 டன் கார வகைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் இனிப்பு வகைகள் ரூ.18 கோடிக்கும், கார வகைகள் ரூ.7 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. தருமபுரி நகரில் மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ள இனிப்பு, கார வகைகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் தருமபுரி மாவட்ட மக்களின் வசதிக்கேற்ப போத்தனூர் – சென்னை செல்லும் முன்பதிவு செய்யப்படாத அதிவிரைவு சிறப்பு ரயிலானது பொம்மிடி, மொரப்பூர் ரயில் நிலையங்களில் நாளை(அக் 3) ஒரு நாள் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பொம்மிடி ரயில் நிலையத்திற்கு காலை 11.03 மணியளவிலும், மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 11.28 மணி மணியளவிலும் வந்து சேரும்.
தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.
தருமபுரியில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞரின் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவி இயக்குநர் அலுவலகம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், தர்மபுரி என்ற முகவரிக்கு நவம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 31) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 28 மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இன்று மழை வருமா?.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தருமபுரி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும். 125 டெசிமலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது. தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடிக்க கூடாது. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு இன்று (அக் 30) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) ஸ்ரீதரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துக்கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.