India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் அருண்ராஜ் சாந்தி அறிவித்துள்ளார். மதுபானக் கடைகள், அனைத்து மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் அக்.3ஆம் தேதி காலை 12 மணி வரையும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாள் கூட்டம் 03.10.2024 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் பருவமழை துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 30 தர்மபுரி மாவட்டத்தின் முழுவதும் காலை முதலே வெப்பம் வாட்டி வதைத்தது. இன்று மாலை 6 மணி நேரப்படி 93 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெப்பத்தின் தாக்காதிருந்து தப்பிக்க மழையை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.
உடல் உறுப்புதானம் அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு மாநிலத்திலேயே இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகளை பெற்றமைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அமுதவல்லி கலெக்டர் கி.சாந்தியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் 02/10/2024 காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். இக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து இன்று மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 476 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
TNPSC-GROUP-IIA பணிகளுக்கான முதன்மைத் தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று துவங்கப்பட்டு திங்கள்தோறும் முதல் வெள்ளிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://t.ly/KssK9இணைப்பின் மூலம் பதிவுசெய்யமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கேட்டுக்கொள்கிறார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று (30.9.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தகடூர் புத்தக பேரவை நிர்வாகிகள் டாக்டர் ஆர் செந்தில், சிசுபாலன் ஆகியோர் உள்ளனர்.
தமிழக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பை விட 19 சதவீதம் அதிகமாக மழை பொழிந்திருந்தாலும் தர்மபுரி மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட மழையின் அளவு குறைந்து பதிவாகி உள்ளது. மேலும் காற்று திசை மாறுபட்டு வடகிழக்கு திசையில் இருந்து வீச தொடங்கி இருப்பதால் விரைவில் பருவ மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் அதற்கான உரிமம் பெற அக் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான உரிமம் பெற https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். உரிமக் கட்டணமாக ரூ.600 அரசுக் கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான் ரூ.500 தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் .
Sorry, no posts matched your criteria.