India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <
தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மவுலிராசு (25), கடந்த முன்தினம் தன் வீட்டில் உள்ள அறையில் உடலில் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவரது செல்போனை பழுது செய்தபோது மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் தர்மபுரி மாவட்டதை சேர்ந்த திலகவதி. 34 ஆண்டுகள் அத்துறையில் 5கும் மேற்பட்ட பிரிவுகளில் பணியாற்றினார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரின் கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். ஷேர் பண்ணுங்க!
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.11) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் பரவலாக சாரல் மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாப்பாரப்பட்டியில் 65.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பென்னாகரம் 36.8 மி.மீ, நெருப்பூர் 45.2 மி.மீ, கலப்பம்பாடி 64.4 மி.மீ, சுஞ்சல் நத்தம் 34.4 மி.மீ, இண்டூர் 33.20 மி.மீ எனப் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
தருமபுரி மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (செப்.11) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.15, முருங்கைக்காய் ரூ.65, சுரைக்காய் ரூ.18, கேரட் ரூ.58, புடலங்காய் ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.28, பீர்க்கங்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.10, பாகற்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.27, பச்சை மிளகாய் ரூ.30, அவரைக்காய் ரூ.25, தேங்காய் ரூ 85, முட்டைக்கோஸ் ரூ 18 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <
Sorry, no posts matched your criteria.