Dharmapuri

News November 6, 2025

தருமபுரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள்<> இந்த லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

தருமபுரி: முதியவருக்கு பாய்ந்த போக்ஸோ!

image

பாப்பிரெட்டிபட்டியில் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா வசிக்கும் இடத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி தெருவில் நண்பர்களுடன் விளையாடியா 4வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின் சிறுமியின் வாக்குமூலம் உண்மை என தெரிந்து,புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

News November 6, 2025

தருமபுரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

தருமபுரி: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

image

தருமபுரி மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.23-குல் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

தொப்பூர்: உடல் நசுங்கி வாலிபர் பலி!

image

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள இரட்டை பாலம் அருகே நேற்று (நவ.05) கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஹீமான்சூ (35) என்பவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பின் வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

தருமபுரியில் மழை எச்சரிக்கை!

image

தருமபுரியில் இன்று (நவ.06) தற்போது திடீரென வானிலை மாறியது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மழையானது காலை 10 மணி வரையில் பெய்யும் எனவும் அறிவிக்கை விடப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 6, 2025

தருமபுரி: கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்!

image

தருமபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ.06) வேலுார் கோட்டை அகழி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கோயில் வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி வெள்ளம் புகுந்தது. கடந்த 1991ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் மழை பெய்த போது, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது எனவும், இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும், அங்குவரும் பகதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 6, 2025

தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

News November 5, 2025

தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

News November 5, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (05.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!