India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் தவறாக முறையில் நடந்து கொள்வதாக கூறி பள்ளி மாணவிகள் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் அவர்களை சமாதான படுத்தும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <

தர்மபுரி கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி மோனிகா தீர்ப்பு அளித்தார், அதில் நிர்மலாவுக்கும், அபினேஷ்க்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் .19) இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர்-19) இன்று நடைபெறும் இடங்களின் விவரம்; தருமபுரி பேருந்து நிலையம் எதிரில் எட்டிமரத்துபட்டி சமுதாயக்கூடம், நல்லம்பள்ளி நாகர்கோவில் ஊராட்சி அலுவலகம், மொரப்பூர் சிங்காரவேலன் மண்டபம், காரிமங்கலம் சமுதாயக்கூடம், பாலக்கோடு கும்மனூர் சமுதாயக்கூடம், அரூர் சுங்காலூர் பி.பி.ஆர்.சி.கட்டிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகளவிலான உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தர்மபுரி தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

தர்மபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தற்காலிகப் பட்டாசுக் கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் விதிகள், 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசுக் கடைக்கான விண்ணப்பங்களை இந்த <

காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அரிமா சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான இலவச கண்புரை பரிசோதனை முகாம் நாளை(செ.20) சனிக்கிழமை அன்று கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.