India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*
அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <
தர்மபுரி மாவட்டம் நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42 நேற்று உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, குழி தோண்டப்பட்டது. இதற்கு சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேதா பிசியோதெரபி கிளினிக் சார்பில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இலவச பிசியோதெரபி மற்றும் எலும்பு பரிசோதனை முகாம் தர்மபுரியில் உள்ள அம்மா கண்ணு மருத்துவமனை அருகில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மூட்டின் செயல்பாட்டினை கண்டறிதல் மற்றும் மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகியவைக்கான பரிசோதனை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் செய்யப்படுகிறது.
தமிழக பாஜக மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஓமலூரில் நடைபெறவிருக்கும் சேலம் பெருங்கோட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தர்மபுரி மாவட்ட மற்றும் மண்டல அளவில் பொறுப்பாளர்களை இன்று தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சரவணன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மபுரியில் மிகவும் பிரிசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் காணப்படும், தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் மறுப்பக்கம் வந்துவிடும். 2000 கிலோ எடை கொண்ட இந்த தூண் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொங்கும் தூண் என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு சோறு பதம் ஆகும். *இது பற்றி தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்*
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி லீடிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காசாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு. இந்த வேலைக்கு 20-30 வயதுக்குட்பட்டவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
தர்மபுரி மாவட்டம் ஏமானுர் வனப்பகுதியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் சடலத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய நேற்று நீதிமன்றம் உத்தரவு. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 3 பேர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் -என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நேற்று, புலிகரையை சேர்ந்த கோவிந்தன் (60) பாலக்கோடு நோக்கி டூ வீலரில் சென்றார். கசியம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென அவரை கொட்டின. மேலும் அப்பகுதியில் வந்த 4 நான்கு பேரையும் தேனீக்கள் கொட்டி படுகாயம் அடைந்தனர். அனைவரும் பாலக்கோடு ஜி.ஹெச்-இல் சேர்த்த நிலையில் வரும் வழியிலேயே கோவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரூர், ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). பட்டதாரியான இவர், நாமக்கல் பகுதியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் சோகமாக இருந்த அவர், தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. அதன்பின் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Sorry, no posts matched your criteria.