India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரநாயக்கனஹள்ளி ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பகிரவும்*
நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<
அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
தர்மபுரியில் சமூகநலன்&மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (DHEW) காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th,12th தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000-ரூ.20,000 வழங்கப்படும். விரும்புவோர் <
சாதிபாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி தருமபுரியில் வரும் 2025ஆம் ஆண்டிற்காக விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு முழுவதும் காவல்துறை ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக திரு.பி.ராமமூர்த்தி, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கான தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்பு எண்கள் மேலே உள்ளது.
தருமபுரி கிழக்கு மாவட்டம் ஏரியூர் கிழக்கு ஒன்றியம் திமுக BDA நிர்வாகிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்வானது ஏரியூர் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் அவர்களின் அலுவலக அரசு வாகன எண் TN 29 AJ 5584 (Ambassador grand 1800) (எரிசக்தி – பெட்ரோல்) கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 15 தேதி 4.00 மணியளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. என ஆட்சியர் சதீஷ் தகவல்
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூலை.07ஆம் தேதி அனைத்து பாடப்பிரிவுகளும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. புதிய கலையரங்கத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.