India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெஞ்சல் புயலின் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மின் கட்டணங்களை டிசம்பர் 10 ஆம் தேதி வரை எந்தவித அபராதமும் இன்றி கட்டிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஏமக்குட்டியூர் பிரிவு சாலையில் ஆய்வு மேற்கொண்டாா். அதனை தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் காரணமாக கன மழையால் பாதிக்கபட்ட இடங்களைக் ஆய்வு செய்தார். அப்போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, இது குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரன் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மழையின் காரணமாக நாளை (02.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவேமழையின் காரணமாக குளம் குட்டை, ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள நீர் நிலைகளை சுற்றி பார்க்கவோ மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் விளையாடவோ கட்டாயம் அனுமதிக்க கூடாது. என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று(டிச 2) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மின்கம்பிகளை சரி செய்தல், மின் கம்பிகளுக்கு இடையே உரசல், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் என மக்கள் கண்டறிந்தால் அதனை கட்டணமில்லா தொலைபேசி எண் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களின் அறிவிப்பு
தற்பொழுது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது எனவும் மேலும் அறுந்து விழுந்துள்ளனர் கம்பிகளைதொட வேண்டாம் எனவும்மின்சாரம் தொடர்பான சாதனங்களை பயன்படுத்தும் மேலும்மழையின் காரணமாக பாதிப்புகள் இருந்தால் கட்டுப்பாட்டறை தொடர்பு கொள்வோம்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பென்னாகரம், அரூர், பொம்மிடி, கடத்தூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். உங்க ஏரியாவில் மழையா?
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா். அறுந்து விழுந்துள்ள மின் கம்பிகளை தொட வேண்டாம். மின்சாரம் தொடா்பான சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மழை பாதிப்புகள் இருப்பின் அதனை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.