Dharmapuri

News November 11, 2024

சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி 

image

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி பெறப்படாத நிலுவையில் இருந்தது. தற்போது அதற்கான அனுமதி பெறப்பட்டது. ரூ. 462 கோடியில் அமையவுள்ள இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

News November 11, 2024

தருமபுரி மேற்கு திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை

image

தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிக்கை வெளியீடு: தர்மபுரி மாவட்டத்தில் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், பூத் முகவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் சுருக்கத் திருத்த முகாமில் கலந்து கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

தருமபுரியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள்

image

தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கல்வட்டங்கள் கண்டறியப்பட்ட பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பங்கு நத்தம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் பெருங்கற்கால மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

News November 11, 2024

தர்மபுரிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் வருகை

image

தர்மபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் (நவம்பர் 10) நேற்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன் சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றனர்.

News November 10, 2024

பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

image

தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு, RBI-யால் அங்கீகரிக்கப்படாத செயலிகளின் மூலம் கடன் பெறாதீர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் மோசடி நபர்கள் உங்கள் சுய விவரங்கள் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு: 1930 எண்களை அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

News November 10, 2024

தேர்வு தோல்வியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பாப்பிரெட்டிப்பட்டி, கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், இவரது மனைவி சுஜிதா (29), இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுஜிதா, டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு படித்து வருகிறார். 4 ஆண்டுகள் நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த சுஜிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2024

ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து ஆய்வு

image

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேற்று ( நவ 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மற்றும் அரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக செயல்பட்டு வரும் 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து நேரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 10, 2024

 வாராந்திர காவத்துப்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

image

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு வாராந்திர காவத்துப்பயிற்சி நேற்று(நவம்பர் 9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்துகொண்டு பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். உடன் காவல் அதிகாரிகள், அலுவலர்கள் இருந்தனர்.

News November 10, 2024

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்பி அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர சட்ட பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நேற்று( நவம்பர் 09) நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரனை நடத்தி விரைந்து முடிக்குமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

News November 10, 2024

தர்மபுரியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்

image

தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழிலாளர்களின் பணிபுரியும் டெலிவரி பாய்(DOME,ISM) போன்ற தொழிலாளர்கள் அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.