India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு நிறுவனமான SECI-ல் கூடுதல் ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், சீனியர் மேனேஜர், ஜூனியர் ஃபோர்மேன் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் BE முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.70,000-2,60,000 வரை வழங்கப்படும். இந்த <

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. இதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்.5) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

தர்மபுரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், இளநிலை கணக்கு உதவியாளர் கம் தட்டச்சர் & மூத்த எழுத்தர் கம் தட்டச்சர் பதவிக்கு 8,875 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

தர்மபுரியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான அவசரத் தேவைகள், உதவிகள், பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு, சேதங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 04342-231077, 04342-231500, 04342-230067 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க.

தருமபுரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி, பொம்மிடி நடூரை சேர்ந்த 19 வயது இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 18 வயது கல்லுாரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் மாணவி, 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் மாணவர் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தில் 9 பதவிகளுக்கு மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக 10ம் முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதி வரை <

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தொழிற்பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,588 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், CS, IT ஆகியவற்றில் BE (அ) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உதவித்தொகையாக மாதம் ரூ.9,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

தர்மபுரி, பாலக்கோடு அடுத்த கும்பனூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (50) உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், சுடுகாட்டுக்கு செல்லும் வழியை தனிநபர் வழி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், உடலை சாலையில் வைத்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.