Dharmapuri

News January 19, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களைக் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டு பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காகவும் பொதுமக்களை பாதுகாப்பதற்காகவும் இன்று ( ஜனவரி 19 ) இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு ரோந்து பணிக்கு செல்வதற்காக காவல்துறையினர் கண்காணித்து வருவதற்கு காவல்துறையினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 19, 2025

நாட்டு வெடி வெடித்து சிறுமி பலி

image

காரிமங்கலம் அருகே பூமாண்டஅள்ளியில் தருமன் என்பவருக்கு சொந்தமான வீட்டு மேல் மாடியில் இன்று(ஜன.19) தருமபுரி ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவிநிலா 6 என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு தீபாவளிக்காக வாங்கிய நாட்டு வெடி பட்டாசுகள் காய வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2025

தருமபுரியில் 59,914 பேர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை

image

தர்மபுரி தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரிகள் நேற்று  தெரிவித்ததாவது மாவட்டத்தில் உள்ள 1,096 ரேஷன் கடைகளில் நேற்று வரை 4,11,144 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 59,914 பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ஆர்வம் காட்ட வில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 பணம் வழங்கப்படும் இந்த ஆண்டு அரசு வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News January 19, 2025

இலங்கை தமிழர்களுக்கு 240 தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை

image

வாணியாறு அணை பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 240 தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியானது நீர்நிலை பகுதிகள் என்ப–தால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் கட்டி தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 19, 2025

தர்மபுரி மாவட்ட காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரொந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 18 இரவு காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது

News January 18, 2025

கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது

image

அழிந்து வரும் திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகளை தலைமுறை கடந்து வளர்த்து பென்னாகரத்தை சேர்ந்த மார்குண்டன் என்ற விவசாயிக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது. 120 ஆடுகளை வளர்த்து வரும் அவரை கவுரவிக்கும் விதமாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கால்நடை மரபணு வளங்கள் நிறுவனத்தால், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தேசிய அளவிலான பாரம்பரிய கால்நடை இன பாதுகாவலர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

News January 18, 2025

பொங்கல் பண்டிகையொட்டி ரூ.4.20 கோடிக்கு மது விற்பனை

image

தர்மபுரி மாவட்டத்தில் 2025 பொங்கல் விழா முன்னிட்டு கரிநாள் எனப்படும் காணும் பொங்கலான ஜன 16ஆம் தேதி,  ஒரு நாள் மட்டும் ரூ.4.20 கோடிக்கு மது விற்பனையானது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும் ஆனால் நடப்பாண்டு மது விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ,கடந்த ஆண்டு ரூ. 4.80 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News January 17, 2025

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம்

image

தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்த பொது எதிர்பாராத விதமாக திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் தீபக் (35), கணேசன் (39) மற்றும் ரவி (34) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

News January 17, 2025

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை: ஆட்சியர்

image

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200ஆம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ஆம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என வழங்கப்படும். கல்விச்சான்றுகள் அசல், நகல்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News January 17, 2025

காரிமங்கலத்தில் எருது முட்டியதில் வாலிபர் பலி

image

காரிமங்கலம் அருகே ராமாபுரம் மண்டுவில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இதில் 7க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. எருதுகள் சீறிப் பாய்ந்த போது கெரகோட அள்ளியைச் சேர்ந்த சுதர்சன் (25) ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(30) ஆகியோர் எருது முட்டியதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுதர்சன் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!