India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இன்று (10.08.2025) நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுக்கறி கிலோ ரூ.700 என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ.200, கட்லா மீன் கிலோ ரூ.220, பாறை மீன் கிலோ ரூ.240, விவசாய மீன் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஜே. ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன் , அரூர் செந்தில் ராஜ்மோகன், பென்னாகரம் குமரவேல், மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது பலருக்கு ஒரு கனவாகவே உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி பலர் மருத்துவத்தை நாடினாலும், இறை வழியிலும் நன்மை நடக்கும் என்று கோயிக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி தருமபுரியில் குழந்தை வரம் அருளும் சில தலங்களுக்கு சென்று வழிபடலாம்.
✔ தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
✔ அமனிமல்லாபுரம் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
✔ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்
ஷேர் பண்ணுங்க!
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு முதல் இன்று (ஆக.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக எஸ்.கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், தருமபுரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (08.08.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா. ஓய்வூதிய இயக்கக் கூடுதல் இயக்குநர் அர்ஜுனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், தன்விவரக் குறிப்புடன் 2 நிழற்படங்கள், தமிழ்ப்பணி விவரம், குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் நகலை, 25.08.2025க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,முகவரிக்கு அனுப்பவும
நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதின் பொருட்டு தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.32.52 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.