India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை அக்டோபர் 4 முதல் 13ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு அரசுப்பள்ளி (ம) கல்லூரிகளிலும் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பட்டிமன்றம் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு புத்தக திருவிழாவில் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பூதநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (31.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ரவிசந்திரன் ஆகியோர் இருந்தனர்.
தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதிக மகசூல் கிடைக்கும் என்றும் மாவட்டத்தில் 425 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோர் விநாயகர் சிலைகளை கரைக்ககூடிய இடங்களாக வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, சேகர்குளி ஹல்லா அணை, தென்பெண்ணையாறு, ஓகேனக்கல் (காவிரி) ஆறு போன்ற இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டுதலின்படி கரைக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கரையில் வருகின்ற 08.09.2024 அன்று நடைபெறுவதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-2025 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நாளை (31.08.2024) நடைபெறவுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள் (ம) விண்ணபிக்க தவறியவர்கள் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளதால் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். மேலும், தொடர்புக்கு: 9600359646.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதாக மூன்றாயிரம் ரூபாய் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தர்மபுரி மாவட்டம் நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் உத்தரவின் படி வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சமரசம் செய்து கொள்ளக் கூடிய வழக்குகளை முடித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவர் ஆனந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24ஆம் தேதி மாநில அரசின் விருது 2024-2025 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதனை புரிந்த 13வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் செப் 30க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 04342-233088 தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும். 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்பட்சத்தில் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இச்சேவையை கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.