Dharmapuri

News September 4, 2024

மாரியப்பனுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்து

image

பாரிஸ் நகரில் பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற வருகிறது. உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற நம் இரும்பு நகரத்தின் ‘தங்க மகன்’ @189thangavelu மாரியப்பன் தங்கவேலுக்கு
தருமபுரி மேற்கு திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தனது x தளத்தில் பதிவு செய்துள்ளார்.

News September 4, 2024

பதிவேடுகள் குறித்து தருமபுரி ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம்
குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி இயக்குநர் கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 4, 2024

தருமபுரி எஸ்பி ஆபிசில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
இன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சோ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 67 மனுக்கள் பெறப்பட்டு 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

News September 4, 2024

தர்மபுரி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

image

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நாளை இந்த விருதுகளை பெற உள்ளனர். தலைமை ஆசிரியர் தங்கராஜ், இடைநிலை ஆசிரியர் மணிவேல், பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் சிவாஜி ஆகியோர் விருதுகள் பெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News September 4, 2024

தர்மபுரி மாவட்ட ஆசிரியர்களுக்கு விருது

image

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் நாளை விருதுகளை பெற உள்ளனர். இதில் தலைமை ஆசிரியர் ஆனந்தன், கணினி பயிற்றுநர் புகழேந்தி, பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார், முதுகலை ஆசிரியர் தமிழ் தென்றல் ஆகியோர் விருதுகள் பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News September 4, 2024

தருமபுரி காவல்துறை அறிவுரை

image

தர்மபுரி மாவட்டத்தில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் இயக்குதல், கனரக வாகனத்தை அதிவேகமாக முந்தி செல்வது, ரேசிங் வாகனம் இயக்குதல் போன்ற ஒழுங்கு செயல்களில் ஈடுபடக் கூடாது. சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொது மக்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 4, 2024

தர்மபுரி ஆட்சியர் கடும் எச்சரிக்கை  

image

தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் காணப்பட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணை அழைக்கவும். 14 வயதிற்குமேல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவ குழந்தை தொழிலாளர்களை ஆபத்தான (ம) அபாயகரமான வேலைகளில் பணியமர்த்த கூடாது என்றும் மீறினால் ரூ.20,000 அபராதத்துடன் 1 ஆண்டுகால சிறை தண்டனையும் நீதிமன்றத்தின் வாயிலாக வழங்கபடும் என்று ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

தர்மபுரி அருகே இளைஞர் மர்ம மரணம்; உறவினர்கள் மறியல் 

image

தர்மபுரி அருகே மகேந்திரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (25).நேற்று விவசாய நில மின்வேலியில் சிக்கி இறந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இன்று வாலிபரின் உறவினர்கள் பிரபுவை திட்டமிட்டு செல்போனில் அழைத்து கொலை செய்து மின்வேலியில் சிக்கி இறந்ததாக நாடகமாடுவதாகவும், செல்போனில் அழைத்தவர்கள் யார் என விசாரிக்க வலியுறுத்தியும் சாலை மறியல் செய்தனர். காவல் அதிகாரிகள் சமாதானம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர்.

News September 3, 2024

தருமபுரி ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக புகார்குழு ICC(ம) புகார்பெட்டி அமைத்திட மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். 07.09.2024-க்குள் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் (ம) நிறுவனங்களில் உள்ளக புகார்பெட்டி ICC (ம) பாதுகாப்பு பெட்டி அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News September 3, 2024

தருமபுரியில் 8,000 பேருக்கு தொழில்நுட்ப பயிற்சி

image

தர்மபுரி அருகே குண்டல்பட்டியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் கண்ணதாசன் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள், தொழில்முனைவோர், கோழி வளர்ப்போர் என 8,654 பேருக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.