India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 15 சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 3.00 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. 8 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, & பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட மின்சார வாரியம் அலுவலகம் கட்டிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மின்சார வாரியம் தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் மற்றும் மின்சார ஊழியர்கள் கலந்துக் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் நாளை வள்ளலார் நினைவு தினம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், இணைந்து மது கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது விற்பனை கூடம் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் பிப்.12ஆம் தேதி காலை 12 மணி வரை மதுக்கூடங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தருமபுரி ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு அரசு அங்கன்வாடி மையம் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரூர் அடுத்த ஆண்டியூர் அருகே டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த கணேசன், (62) ,மாணிக்கம், (60) ஆகியோர் செல்லம்பட்டி சென்று விட்டு வாகனத்தில் ஆண்டியூர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவருக்கும் கால் முறிந்தது படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூரில் நமக்கு நாமே திட்டம் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விழா துவக்கி வைப்பதற்காக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வருகை தந்தார். இந்நிலையில் தருமபுரி பாமக மாவட்ட கழக செயலாளர் அரசாங்கம் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் இவரது 6 வயது மகன் ஆகாஷ் நேற்று இண்டூரில் உள்ள இவரது உறவினர் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கால் தவறி இரும்பு கேட்டில் கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த ஆகாஷை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.