India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தமது அறிக்கையில் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள அண்ணா சிலைகளுக்கும், சிலை இல்லாத ஊரில் அவரது உருவப்படத்திற்கும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மபுரி அருகே கிட்டம்பட்டி தண்டாவில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்காத சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உடன் பிடிஓ சந்தியா கலைவாணி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) தரச்சான்று பெற்றுள்ளதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தியிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் தரச்சான்று காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் வேளாண்மை இணை இயக்குநர்,குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர், தேன்மொழி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்கள் தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும். புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்பு திறன் பிற ரகம் கலப்பு ஆகியவற்றை கொண்ட விதைகளாகும். விவசாயிகள் விதையின் தரத்தினை மாவட்ட விதை பரிசோதனை அலுவலகத்தில் பரிசோதனை செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விதைப்பண்ணையில் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டடிற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை மேம்படுத்த மாவட்டத்தில் 1, 10, 000 மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. எனவே, அருகே உள்ள வேளாண் மையங்களில் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி அடுத்த போதகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10-ம் தேதி மர்மமாக இறந்தார். இதுகுறித்து அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்பத்தகராறில். மனைவி ஆர்த்தியை கணவன் கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அரூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் (குரூப் – II) தேர்வானது நாளை (செப் 14) நடைபெறவுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 101 தேர்வு மையங்களில் தேர்வு நடைப்பெற உள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 27,540 தேர்வு எழுத விருக்கின்றனர். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.
தருமபுரி மேற்கு திமுக மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தருமபுரி மேற்கு திமுக மாவட்ட கழக செயலாளார் பழனியப்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த மாதையன்(65). கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது மனைவி ருக்மணியுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தொப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது லாரி ஒன்று டூவீலர் மீது மோதியது. இதில் ருக்மணி கண் முன்னே கணவர் பலியானார். ருக்மணி படுகாயம் அடைந்தார். இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இன்று தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளருக்கு அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு, இரண்டு ஆண்டு மருத்துவ படிப்புகள், ஓட்டுனருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவை அடிப்படை கல்வித் தகுதியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.