Dharmapuri

News March 30, 2024

தர்மபுரி அருகே வாகனம் மோதி பலி

image

இன்று
காரிமங்கலம் அருகே காட்டுசீகல அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கெரகோட அள்ளியை சேர்ந்த ஞானசேகர் (43) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். 

News March 30, 2024

பூக்களை தூவி பெண் வேட்பாளரை வரவேற்ற கிராம மக்கள்!!

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி  இன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு போன்ற இடங்களில் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஊர்மக்கள் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர். 

News March 30, 2024

தர்மபுரி உழவர் சந்தையில் விழிப்புணர்வு

image

மார்ச் 30 இன்று நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமிய கலை குழுவினருடன் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் கையேடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார் எனது வாக்கு விற்பனைக்கு இல்லை தெரிவித்தனர்.

News March 30, 2024

ரயில் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி

image

மோட்டாங்குறிச்சியை சேர்ந்த அருண் இவர் பொம்மிடி ஸ்டேஷனில் கேங் எண் 3ல், டிராக்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மற்ற ஊழியர்களுடன் நேற்று பொம்மிடி – புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்ப்பாராத  மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 30, 2024

வாணியாறு டேம் சேற்றில் சிக்கி மாணவர் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 3ம்ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்குன்னி சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார்(19), முதலாண்டு மாணவர் பூபதி ஆகிய இருவரும் நேற்று, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்‌. அணையில்  இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ  எடுக்க கூறியுள்ளார். அப்போது  அணையில் சேற்றில் சிக்கி பிரேம் குமார் உயிரிழந்தார்.

News March 29, 2024

தர்மபுரி அருகே கோர விபத்து

image

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு வனப்பகுதியில் கார் மீது டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார் அவரை வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 28, 2024

மான் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் காயம்

image

தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News March 28, 2024

அக்காவை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

image

ஒகேனக்கல்லை சேர்ந்த ராஜம்மாள் 56, இவரது தம்பி காமராஜ் 54. இருவருக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராஜம்மாளை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கு தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் காமராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து காமராஜுக்கு ஆயுள் தண்டனை & 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.

News March 28, 2024

தருமபுரி: லாரி மோதி 2 பேர் பலி

image

தருமபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த செல்லியம்பட்டி பகுதியில் நேற்று(மார்ச் 27) மாலை லாரி மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில், டெம்போ மேல் லாரி ஏறியதில் டெம்போ டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 28, 2024

பாலக்கோடு அருகே வைக்கோலுடன் எரிந்த லாரி!

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கோவிலூர் என்ற இடத்தில் நேற்று(மார்ச் 27) வைக்கோல் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!