India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி காலை 10 மணி முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அரசுப் பணி பேராசிரியர்கள் தொழிலாளர்கள் பங்கு பெறுகின்றனர். விளையாட்டுப் போட்டிக்கு தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள் கலந்து கொள்கின்றனர்கள்.
தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தக பேரவை சார்பில் புத்தக திருவிழா வருகிற அக் 4 ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. . இதற்காக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுரவ் குமார்,பொறுப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 225 வீரர்களும் 129 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் (செப்-30)அன்று கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி தகுதி உடையவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 9442286874.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் செப்டம்பர் 21 ஆம் தேதி குடியிருப்பில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர்(போ) வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவி பயன்படுத்தி சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் செப்-28 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்க உள்ளது.எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 13,15 (ம)17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஷேர் செய்யவும்.
நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டியை சேர்ந்த சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தொப்பூர் போலீசார் அவரது மனைவி உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் அவரது மனைவி மருகனிடம் பணம் கொடுத்து , தருமபுரியை சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருடன் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சென்னை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் தகுதியுள்ள 16 நபர்களுக்கு வருவாய் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகங்களில் பணியாற்றிட அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணைகளை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி (20/09/2024) இன்று வழங்கினார்.
இலக்கியம்பட்டியில் பிரியாணி கடையில் ஊழியராக பணிபுரிந்த முகமது ஆசிக் என்பவரின் காதல் விவகாரத்தில் அவர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில் ஜனரஞ்சன், ஜன அம்சப்பிரியன், ராஜ்குமார், பரிதிவளவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். குற்றத்தின் தன்மையை கொண்டு அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.