Dharmapuri

News September 25, 2024

டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை

image

தர்மபுரி GH இயற்கை மருத்துவ பிரிவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். துளசி சாறு, சிவப்பரிசி கஞ்சி, கேரட் சாறு, சாத்துக்குடி சாறு குடிக்கலாம் எனவும், நாள் ஒன்றுக்கு 2 முறை நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 25, 2024

அடையாளம் தெரியாத ஆண் பெண் சடலங்கள்

image

தடங்கம் அருகே புதிய சிப்காட் பகுதியில் அடையாளம் தெரியாத 55 வயது ஆண் மற்றும் 50 வயது பெண்ணின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளனர். ஜிஹெச்சுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர்கள் யார் வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வீசப்பட்டனரா என அதியமான் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 25, 2024

தர்மபுரியில் கரும்பை விற்றால் கடும் நடவடிக்கை

image

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 24-25 ஆண்டுக்கு அரவைக்கு வைக்கப்பட்டிருந்த கரும்பை தரகர்கள் மூலம் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லும் புகாரையடுத்து பதிவு செய்யப்பட்ட கரும்பை வெளிச்சந்தையில் விற்றால் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1966 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

கண்காட்சியில் பங்கேற்க தர்மபுரி ஆட்சியர் அழைப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், சிறுதொழில்தொகுப்புகள், உற்பத்திகுழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், வட்டார வணிக வளஅமைப்புகள், தங்களது உற்பத்தி பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் பொருட்களின் விபரங்களை https://exhibition.mathibazaar.com என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்படலாம் என மாவட்டஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

தர்மபுரி அருகே எம்எல்ஏ மீது அடுத்தடுத்து புகார்

image

பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கோவிந்தசாமி திமுக தலைவர்களை தரக்குறைவாக மிகவும் தரம் தாழ்ந்து பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி மேற்கு மாவட்டம் மொரப்பூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் K.M.ரத்தினவேல் தலைமையில் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், மகளிர் அணியினர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இன்று மனு அளித்தனர்.

News September 24, 2024

தர்மபுரியில் காட்டு யானை தாக்கி இருவர் பலி

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்கோட பட்டி கிராமத்தைச் சார்ந்த துரைசாமி என்பவரையும், பொப்பிடி அருகே உள்ள பூனையின் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரையும் நேற்று இரவு ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்நிலையில் வனத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வனத்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News September 24, 2024

விவசாயி குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.

News September 23, 2024

பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ மீது திமுகவினர் புகார்

image

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுகூட்டத்தில் கருணாநிதி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோரை பற்றி தரக்குறைவாக பேசியதாக பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினர் புகார் அளித்தனர்.

News September 23, 2024

தருமபுரியில் மாணவர்களுக்கான போட்டிகள்

image

தருமபுரியில் வருகிற அக்டோபர் 4 முதல் 14 வரை தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு 24.09.24 நாளை தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் பல கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டி மன்றம் போன்றவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோர் நடத்துகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News September 23, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

image

தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி காலை 10 மணி முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அரசுப் பணி பேராசிரியர்கள் தொழிலாளர்கள் பங்கு பெறுகின்றனர். விளையாட்டுப் போட்டிக்கு தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள் கலந்து கொள்கின்றனர்கள்.