India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தனி மற்றும்மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களது 9363962213 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரி generallobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி இன்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள். இவர் சம்பவத்தன்று இரவு தூங்க சென்று, அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரின் இரும்புபெட்டியில் வைத்திருந்த 6 பவுன் செயின், 1 பவுன் பவுன் செயின என 7 பவுன் நகை, ரூ.15 ரொக்கம் திருடுபோயிருந்தது. இது குறித்து நேற்று(மார்ச் 26) அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா நேற்று(மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், தருமபுரி மாவட்டம் 2 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு வறட்சி ஏற்பட காரணம் மலைகளை உடைத்தால் எப்படி பருவ மழை வரும் என கூறினார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பாமக பெண் வேட்பாளர் செளமியா அன்புமணி வழிபாடு செய்தார். அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தர்மபுரி தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இன்று நாம் தமிழர் கட்சியினர் 2 மணி அளவில், தேர்தல் அதிகாரியுமான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் கூட்டணி இருக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி, லப்பர்சி காலனி அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ) பா. வெங்கடேஷ் தலைமையிலான குழு, குழாய் வழியாக தண்ணீரை பீச்சு அடித்து கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனை அழகு கலை பயிற்சி மார்ச் 26, 27, 28 ஆகிய 3 தினங்களில் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தி அடைந்த ஆர்வம் உள்ள பெண்கள் முன்பதிவு செய்து பங்கு பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668100181, 7010143022, 9841336033 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் திப்பட்டி கிராமத்தில் பழைமை வாய்ந்த திரௌபதியம்மன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கொடியேற்றம், இரண்டாம் நாள் தீமிதி விழாவை தொடர்ந்து நேற்று (மார்ச் 25) மாலை 6 மணிக்கு 3ம் நாள் திரௌபதி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ராமமூர்த்தி நகர் சோதனை சாவடியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் அதில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.450000 எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அதனை கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் பா.ம.க வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அன்புமணி ராமதாஸ் எம்பி மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ, ஜி. கே.மணி. பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் அமமூக மாவட்ட பிரதிநிதி உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.