India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு https//www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் 20/05/2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவ, மாணவிகள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனது செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தர்மபுரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தர்மபுரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கருங்கல்மேடு பகுதியில் ஸ்ரீ அங்காளம்மன் மண்டல பூஜை நேற்று(மே 16) வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காள அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிடா வெட்டி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை டூ மாரண்டஹள்ளி செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நேற்று (15-5-24) இரவு பனை மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லம்பள்ளி, பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா, இவரது 2 வது கணவர் ஹரிகிருஷ்ணன். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டிற்கு வந்த கதிரவன் ஹரியை கத்தியால் குத்தினார். பதிலுக்கு அதே கத்தியால் கதிரவனையும் ஹரி கிருஷ்ணன் வெட்டினார். இதில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த கதிரவன் பரிமளாவின் மகளை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.