India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024முதல் தொடங்கியது. விண்ணப்பம் சமர்ப்பிக்க 20/05/24 இன்று இறுதி நாளாக இருந்தது. இன்னும் கூடுதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் ஏதுவாக இணைய வழி விண்ணப்பம் செய்ய 24/05/2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகின்றது.

தர்மபுரி, பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் எம்எல்ஏ ஆய்வு நிகழ்ச்சி (மே.20) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இந்நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக சேது(30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இன்று தொழிற்சாலையின் மேல் பகுதியில் வயர் இணைக்கும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை தர்மபுரி
ஜி.ஹெ-ச்சுக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், சிவக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தரக்கோரி கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வந்துள்ளார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காமல் சர்வேயர் 6 ஆண்டுகளாக இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவகுமார் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கோட்டை கோயில் என்றழைக்கப்படும் மல்லிகார்சுனர் கோயில். இக்கோயில் கோட்டைக்கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், தகடூர் காமாட்சி கோயில், கோட்டை சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில், நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயில் இதுவும் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் இறைவனை பழங்கால வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகின்றன.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்ய (மே.20) இன்று இறுதி நாளாகும். இந்நிலையில் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடர்பு கொள்ளலாம் -99417-77069, 99628-92406 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூர் டூ சேலம் நெடுஞ்சாலையில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே தனியார் பள்ளிக்கு எதிரே நேற்று இரவு முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற கார், லாரியின் பின்னால் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பயணம் செய்த திண்டுக்கலை சேர்ந்த பாசில் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி; 2024-2024 ஆம் கல்வி ஆண்டில் RTE25% இட ஒதுக்கீட்டு மூலம் தனியார் பள்ளியில் சேருவதற்கு <

தர்மபுரி, பென்னாகரம் சந்தை திடலில் தக்காளி மார்க்கெட் அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக இன்று ஒரே நாளில் கூடைக்கு ₹200 முதல் ₹250 வரை விலை உயர்ந்து. சந்தையில் ஒரு கிரேட் ₹650 முதல் ₹700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட சிறைச்சாலையை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் குறிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது உதவி சிறை அலுவலர் கிருஷ்ணகுமார். தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.