India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று(ஜூன் 4)வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் என தொகுதி முழுவதும் 10,074 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 1,070 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆ.மணி 21,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இன்று மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.

2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ. மணி 4,11,602 வாக்குகள் பெற்று 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பாஜக – பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,98,234 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தொகுதியின் தர்மபுரி நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் மணி 22,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கட்சி நிர்வாகிகள், தர்மபுரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த நிர்வாகிகள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 4:10மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ. மணி 3,81,049 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,61,381 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2,54,508 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 3:50மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ. மணி 3,61,082, வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,43,883 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2,40,914 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 3: 20 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ.மணி 2,79,914 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,69,762 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,90,647 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 2:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 24 வேட்பாளர்களில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,56,828 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கடும் பின்ண்டைவை சந்தித்து வருகிறார்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 2:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 24 வேட்பாளர்களில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,56,828 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,79,410 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 1.20 மணி நிலவரப்படி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 1,88,501 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,26,332 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.