Dharmapuri

News June 21, 2024

எந்த சாராயமும் வேண்டாம்: சௌமியா அன்புணி

image

தர்மபுரி மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புணி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர் பேசுகையில், கள்ளச்சாரயம் குடிப்பதை பற்றி பேசுகிறார்கள். தர்மபுரிக்கு கள்ளச்சாரயமும் வேண்டாம், நல்லசாராயமும் வேண்டாம். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தி தாய்மார்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றார்.

News June 21, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொழில்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்புடன் வங்கியாளர்கள் கூட்டம் நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் நன்றி தெரித்தனர்..

News June 21, 2024

அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. அதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நல பணிகளை நடை பெற உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

News June 21, 2024

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்ட போட்டி

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தடகள சங்கம் இணைந்து போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் சாலை ஓட்டம் ஜூன் 23 காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23ஆம் தேதி காலை 5.30 மணிக்குள் விளையாட்டு மைதானத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

இலவச கண் பரிசோதனை முகாம்

image

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தர்மபுரியில் உள்ள வாசன் கண் மருத்துவமனையின் மூலம் சங்கத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்களுக்கும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் குடும்பத்திற்கு இலவச கண் பரிசோதனை செய்து கொள்ள கூப்பன்கள் வழங்கப்பட்டன.

News June 21, 2024

தர்மபுரி அருகே அதிகளவு பாரம் ஏற்றுவதால் விபத்து அபாயம்

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி கடத்தூர், ராமியம்பட்டி, ஒடசல்பட்டி, மணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிச் செல்வதால், விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. இதனை காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 20, 2024

முதல்வர் தர்மபுரி வருகை: இடம் தேர்வு 

image

தருமபுரி மாவட்டத்திற்கு ஜூலை மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை அடுத்து அதற்கான இடம் தேர்வு செய்யும் பொருட்டு பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் சாந்தி தலைமையில், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம். பெ. சுப்ரமணி Ex.MLA பார்வையிட்டனர்.

News June 20, 2024

 விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 

image

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜூன் 21) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடக்கிறது . எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

News June 19, 2024

தர்மபுரியில் பீன்ஸ் விலை குறைந்தது

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பீன்ஸ் ₹180 முதல் ₹190 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தர்மபுரி உழவர் சந்தையில் கிலோவிற்கு ₹32 முதல் ₹42 வரை விலை குறைந்து ஒரு கிலோ ₹158 முதல் ₹165 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளி, சின்ன வெங்காயம், வெண்டைக்காய், முள்ளங்கி போன்றவற்றை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

News June 19, 2024

தருமபுரி அருகே தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

image

கம்பைநல்லுர் அடுத்த பட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(65). விவசாயியான இவர் கடந்த மாதம் மே 30ஆம் தேதி டிராக்டர் உழவுப் பணியின் போது தவறி கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!