Dharmapuri

News June 24, 2024

தர்மபுரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்டம் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற (ஜூன் 29)சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்;https://forms.gle/JJZiLSgprrtCftpb8 என்ற கூகுள் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்கள்;88255 25544,7010977900

News June 24, 2024

இன்று 2ஆம் கட்ட கலந்தாய்வு

image

அரூர் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட பொது கலந்தாய்வு இன்று(ஜூன் 24) நடைபெறுகிறது. சேர்க்கையின் போது மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டும். மேலும், இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

தர்மபுரிள்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

தர்மபுரி மாவட்டத்தில் 1433ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) 25ஆம் தேதி பென்னாகரத்திலும் 26ஆம் தேதி பெரும்பாலையிலும் 27ஆம் தேதி சுஜில் நத்தத்திலும் 28ஆம் தேதி பாப்பாரப்பட்டியிலும் நடைபெறுகிறது. பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பம்

image

புதுமைப்பெண் திட்டம் 2024-2025 ஆம் கல்வி ஆண்டு தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உங்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்ட புதுமைப்பெண் திட்ட கல்லூரி அலுவலர் மூலம் (www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News June 23, 2024

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

image

 தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

News June 23, 2024

வத்தல்மலையில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை கலெக்டர் கி.சாந்தி  நேற்று ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். 

News June 22, 2024

தருமபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

கள்ள சாராயம் விற்பனை குறித்து ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கள்ள சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் போதை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:10581 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

News June 22, 2024

கள்ளச்சாராயம் விற்ற மூவர் கைது

image

அரூர் அடுத்த எஸ். தாதம்பட்டியில் கள்ளச்சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன்(55) மோகன்(68) பாலக்குட்டை சின்ராஜ்(35) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்த கோட்டப்பட்டி போலீசார் அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது கள்ளக்குறிச்சி அடுத்த மன்னார்பாளையத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. 

News June 22, 2024

எந்த சாராயமும் வேண்டாம்: சௌமியா அன்புணி

image

தர்மபுரி மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புணி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர் பேசுகையில், கள்ளச்சாரயம் குடிப்பதை பற்றி பேசுகிறார்கள். தர்மபுரிக்கு கள்ளச்சாரயமும் வேண்டாம், நல்லசாராயமும் வேண்டாம். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தி தாய்மார்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!