India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், இலவச பட்டா, வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து 631 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

உலக மக்கள் தொகை தினம் வரும் ஜூலை.11 அன்று கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், அனைத்து துறைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், உலக மக்கள் தொகை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரகக் குடியிருப்பு பழுது பார்க்கும் திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (02/07/2024) காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (ஜூலை 1) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்ததற்கு, அவரது மனைவி பூவரசி என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்க்கான வங்கிக் காசோலையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி, அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் இன்று(ஜூலை 1)பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி துவக்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இளைஞர்களின் நலன் காக்க சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்ததை அடுத்து நேற்று (ஜூன் 29) தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தருமபுரி நகரில் ரூ. 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிரை பொறுத்து அவர்கள் கடன் தரும் வங்கிகள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மணி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மணி, தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.