India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையின் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகளான மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் வட்டார அளவிலான கணக்காளரிடமிருந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ள பட்டய கணக்கிட்டாரிடமிருந்து விருப்ப உரிமை கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04342-233298 எண்களின் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், இரு தரப்பினரையும் அழைத்து தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேர்க்கைக்கு மாணவ மாணவிகள் இன்று (ஜூலை 3) முதல் (ஜூலை 5) தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று உடனடியாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் அடிப்படை வசதி குறித்து, தூய்மை பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று (ஜூலை 2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் வேளாண்மை இயக்குனர் இளங்கோவன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழு கடன் வழங்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஒட்டியும் பொது மக்களிடையே சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் https://cybercrime.gov.in/இணையதளத்திலும், 1930 சைபர் கிரைம் உதவி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட காவல்துறையினர் நேற்று (ஜூலை.1) தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.