India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தர்மபுரி தொகுதி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜிகே மணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ வேலுசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பலர் கலந்து கொண்டனர்.

ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களில் இருந்து 5ஜி டவர் அமைப்பதற்காக கூறி போலியாக வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும் சைபர் கிரைம் எண்கள் 1930 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மாலை அல்லது இரவு, வினாடிக்கு சுமார் 20,000 கன அடி நீர், காவிரி ஆற்றில் வர உள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றுல் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தருமபுரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப் பேரவை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு புத்தக விழா வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தினம்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுராபாய் சுந்தரராஜ்ராவு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தப் புத்தக விழாவில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.

தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் நேற்று (ஜூலை 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு & ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கேழ்வரகு, கம்பு, சாமை தொகுப்பு அமைக்க ஏக்கருக்கு 6,000 மானியமாகவும், சிறுதானிய வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு கிலோவுக்கு 100 அல்லது 50% மானியம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ரவுடிகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் பங்கேற்று அறிவுறுத்தினார்.

பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஊர்க் காவல் படை பணிபுரிந்த போது 26.01.2024 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் குடும்பத்திற்கு விபத்துக் காப்பீட்டு நிதியாக ரூ. 17,00,000/-ற்கான வங்கி வைப்புத் தொகைக்கான பத்திரங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற (Group-I) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (13.07.2024) நேரில் பார்வையிட்டார். உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கலப்பம்பாடி ஊராட்சி விபிஆர்எஸ் கட்டடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 15 /07 /2024 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கவுன்சிலர், திமுக ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.