India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 13.7 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு பிரிவு உள்ளிட்ட 33 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 ஆண்டுகள் பணி செய்து நிறைவு பெற்ற காவலர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று 33 காவல் நிலையங்களில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய 334 காவலர்கள் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் இன்று நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெறுகிறது.

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீரில் கலங்கல் தன்மை மிக அதிகமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழுமையாக வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவான 145 MLD பம்ப் செய்ய இயலவில்லை. இதனால் தருமபுரி மாவட்டத்திற்கு ஒருநாளும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒருநாளும் தண்ணீர் வழங்கப்படும். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ஒகேனக்கல்லில் சுற்றலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதில், மழைக்காலங்களில் வாகனத்தை மெதுவாக இயக்குவதுடன் வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரும்படி வாகனத்தை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கு இடையே போதுமான இடைவெளியை கடைப்பிடிக்கவும் மழைநீர் தேங்கியுள்ள இடங்களின் கவனமாக வாகனத்தை இயக்கவும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தர்மபுரி, அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு, ஆகஸ்ட் 2024-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் கட்ட சேர்க்கை நடைபெறுகிறது. இதில், தொழிற் பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் நேரடி சேர்க்கை 15/07/2024 முதல் 31/07/2024 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு தர்மபுரி – 9445803042, அரூர் – 9600359646 அழைக்கலாம்.

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று (ஜூலை20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் நெல், சோளம், நிலக்கடலை பயிர்களுக் காப்பீடு கட்டணத்தை செலுத்த வருகின்ற 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் & பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.