India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள (TNAlert App) டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை பொதுமக்கள்அனைவரும் மற்றும் அனைத் துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் அரசு சாரா அமைப்பினர் அனைவரும் பதிவிறக்கம் செய்திட கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த (TNAlert App) புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம், பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் ( மற்றும்) சேதங்கள், தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 04342231077, 8903891077, என்ற புகார் எண்களை பயன்படுத்தலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆறுகள் நீர் நிலைகள் மற்றும் குளங்களில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்காதீர்கள். மரத்தடியில் நிற்பதை தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது முகப்பு விளக்கினை ஒளிரும்படி வாகனத்தை இயக்கவும். மின் கம்பங்கள், மின்கம்பிகள், மின் பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். இவ்வாறு தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு மழைக்காலம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்த 26 வாசகர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மபுரி என் ஜி ஓ காலனி பகுதியை சேர்ந்த நூலக அலுவலர் எஸ் ஜெயக்குமார் என்பரின் சொந்த நூலகங்கத்திற்கு விருது மற்றும் ஊக்கப்படுத்தும் விதமாக விண்ணப்பித்த அனைவருக்கும் பரிசுத்தொகை கேடயங்களை கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் கிராம சாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் விவசாய நிலங்களில்ஓடும் டிராக்டர் சாலையில் ஓட்டுவதால் சாலைகள் சேதமடைகிறது. இச்செயல் பொது சொத்திற்கு சேதம்விளைவிப்பதால் சட்டப்படி குற்றமாகும். டிராக்டர்களை தார் சாலையில் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனஆட்சியர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பொழிந்து வரும் சூழலில் தருமபுரி மாவட்டத்தில் நாளை(அக் 16)கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று(அக் 13)வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு உரிய முதலீடு கிடைக்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் இரண்டாம் கட்டமாக நாளை (அக்.15முதல் டிசம்பர் 8 வரை நடைப்பெறும். திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா,ஆதார்,வங்கி கணக்கு முதலியவற்றுடன் ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர்களை அணுகி பயனபெறலாம்.

தர்மபுரியில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் தோட்டக்கலை துறை இணையதளம்www.tnhorticulture.tn.gov.in பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், “நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் எனக்கூறி அதிக மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலு,ம்1930 என்ற புகார் எண்ணையும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், இன்று காலை10 மணி வரை தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லுவோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.