India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி சேவை – மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியைச் சார்ந்த மனோஜ்குமார். திருமணம் ஆகி மனைவி இறந்து விட்ட நிலையில், அதே பகுதியைச் சார்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியைப் பின்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமறைவான வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சில தினங்களாகவே தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 மணி நிலவரப்படி. தர்மபுரி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு. பாலக்கோட்டில் 39 மில்லி மீட்டர், அரூரில் 23.2 மி.மீ, மாரண்டஅல்லியில் 19 மி.மீ, பென்னாகரத்தில் 15.4 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 15 மி.மீ, தர்மபுரியில் 12 மி.மீ, ஒகேனக்கல் மலைப்பகுதிகளில் 1.6மி.மீ, மழை பெய்துள்ளது .

தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கூட்டரங்கில் இன்று 15.10.24 இல் மாவட்ட ஆட்சியர் கே. சாந்தி அவர்கள் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி இம் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்க உள்ளார். பொதுமக்கள் மனுக்களை 30.10.24க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பு

தருமபுரி மாவட்டம் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் தலைமையில் வருகின்ற வெள்ளிக்கிழமை 18.10.24 இல் காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று அறிவித்தார். தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நீதி வழிகாட்டுதல் மையமத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் வருகின்ற (அக்-18) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நீதி விளையாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2024-25 ஆம் ஆண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9,
11 ஆம் வகுப்பு மாணவர்கள் முறையே 8, 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்bஅதிகாரமளித்தல் துறையின் இணையத்தளத்தின் (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்பெறலாம்

தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் ஆய்வாளராக ஆர் கவிதா இன்று (15/10/2024) பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்று கொண்ட வருவாய் ஆய்வாளருக்கு அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள (TNAlert App) டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை பொதுமக்கள்அனைவரும் மற்றும் அனைத் துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் அரசு சாரா அமைப்பினர் அனைவரும் பதிவிறக்கம் செய்திட கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த (TNAlert App) புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.