India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பிரதமர் PMKVY4.0 முன்னோடி பயிற்சி திட்டத்தின் கீழ் உற்பத்தி மேற்பார்வையாளர் 720 மணி நேரம் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையம் முதல்வர் 04342 266601, 9940830290 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி சேலம் செல்லும் வழியில் தனியார் கிழங்கு மில் அருகில் மில்லில் கிழங்கு இறக்கி விட்டு சென்ற லாரியும், காரும் மோதியதில் கார் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கம்பைநல்லூர் சவுளூர் பகுதியைச் சேர்ந்த முரளி (35) பலியானார். பாப்பிரெட்டிப்பட்டி ராஜேந்திரன் மகன் ராஜேஸ் (எ) விக்னேஷ் (30) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தர்மபுரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 2026 தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன், தர்மபுரி எம்பி ஆ.மணி, தொகுதி மேற்பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(அக் 18) தருமபுரி எம்பிளாய்மென்ட் ஆபிஸில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, டிகிரி படித்தவர்கள் (HTTPS://WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN) என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி நேற்று அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 17-10-2024 வானம் மேகங்களுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை நேற்று குறைந்தது. மீண்டும் இன்று காலை முதல் மழை தொடங்கியுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி மீன் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இதனால் அங்குள்ள கே ஆர் எஸ், கபினி ஆகிய அணிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து காவிரி உப நீர் திறந்துவிடப்பட்டது. ஒகேனக்கல்லில் இன்றைய (அக்-17) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது.

ஐடிஐ மாணவர்களின் சேர்க்கை(24- 25) ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கையானது அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மாணவர் சேர்க்கை நாளை (18.10.2024) இறுதி வாய்ப்பாகும். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தகுதியானதாகும்.

தருமபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி சேவை – மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியைச் சார்ந்த மனோஜ்குமார். திருமணம் ஆகி மனைவி இறந்து விட்ட நிலையில், அதே பகுதியைச் சார்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியைப் பின்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமறைவான வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.