Dharmapuri

News October 27, 2024

தர்மபுரி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தர்மபுரி மாவட்டத்தில் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது, அவர்கள் கேட்கும் உரிய விபரங்களை அளித்து, கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் இவ்வாறு நேற்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 27, 2024

அன்புமணி ராமதாஸிடம் திருமண அழைப்பிதழ் 

image

தருமபுரி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் இன்று மொரப்பூர் ஒன்றிய செயலாளர் நாராயணன் திருமண விழாவிற்கு திருமண அழைப்பிதழை வழங்கி வரவேற்றார். உடன் மொரப்பூர் ஒன்றிய துணை சேர்மன் வன்னியபெருமாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 26, 2024

அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு வீட்டுமனை பட்டா

image

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ரேகோடஅள்ளி ஜாலிபுதூர் கிராமத்தை வசித்து வரும் முருகேசன் என்பவர் தனது சொந்த நிலத்தை கடந்த 2006ஆம் ஆண்டு ஜாலிபுதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கியதை தொடர்ந்து அவர் பெயரில் நிலம், வீடு எதுவும் இல்லாததை  அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக இன்று தர்மபுரி கலெக்டர் X தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News October 26, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுக்கு விண்ணப்பம் ஆட்சியர் தகவல்

image

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விருதுக்கு தகுதியுடையவர்கள் https//awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28/10/2024 அன்று பிற்பகல் மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தர்மபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம்

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் அறிந்திட நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் (https://scholarships.gov.in)அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

தர்மபுரி ஆட்சியர் வேண்டுகோள் 

image

தர்மபுரி மாவட்டத்தில், விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும், குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

News October 25, 2024

தர்மபுரி மாவட்ட சீர்மரபினர் கவனத்திற்கு 

image

தர்மபுரி மாவட்டத்தில் சீர்மரபினர் வாரியத்தில் புதியதாக உறுப்பினர் பதிவு செய்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறவும், வருகின்ற 28/10 /2024 முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அறிவித்துள்ளார். 

News October 25, 2024

பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

image

தர்மபுரியில் குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவோ அல்லது தள்ளுபடி விலையில் பட்டாசுகள் தருவதாகவோ மற்றும் துணிகள் தருவதாகவோ சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அக்டோபர் 24 நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 24, 2024

தருமபுரியில் அக்.29ஆம் தேதி வரை மழை

image

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டானா புயல், நாளை (அக்.25) காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று (அக்.24) தர்மபுரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்.29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

News October 24, 2024

2024 2025 ஆம் ஆண்டுக்கான ராபி பயிர்களுக்கு காப்பீடு

image

தர்மபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு தர்மபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள 23 குறு வட்டாரங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

error: Content is protected !!