Dharmapuri

News October 31, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 31) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 28 மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இன்று மழை வருமா?.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

தருமபுரி மக்களே பாதுகாப்பாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தருமபுரி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும். 125 டெசிமலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது. தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடிக்க கூடாது. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

News October 30, 2024

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு இன்று (அக் 30) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) ஸ்ரீதரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துக்கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News October 30, 2024

 நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் தகவலை அறிந்து கொள்ளலாம் மற்றும் தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

தர்மபுரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தர்மபுரியில் குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவோ அல்லது தள்ளுபடி விலையில் பட்டாசுகள் தருவதாகவோ மற்றும் துணிகள் தருவதாகவோ சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News October 30, 2024

ஸ்மார்ட் பொர்டு வகுப்பை திறந்து வைத்த எம்எல்ஏ

image

நல்லம்பள்ளி வட்டம் மானியதஅள்ளி ஊராட்சி பொடாரன்கொட்டாயில் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2,00,000 மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் பொர்டை தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் பாமக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இருந்தனர்.

News October 29, 2024

தர்மபுரி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் அக்.29 இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பாண்டில் சிறப்பு ராபி பருவத்தில் நெல் 2, ராகி, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் இ சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யும் போது அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம் இதனால் மகசூல் இழப்புகளை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

தர்மபுரியில் தமிழில் பெயர் இல்லாத நிறுவனம் 

image

தருமபுரி, சோமேனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் என்னும் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள போதிலும் அதன் பெயரானது முதன்மை மொழியாக இந்தியும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் உள்ளது. இதனால், தமிழ் ஆர்வலர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தியுள்ளனர். 

error: Content is protected !!