Dharmapuri

News April 27, 2024

தருமபுரி: சில்லரை வாங்குவதுபோல் நடித்து திருட்டு!

image

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லுாரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் அப்பகுதியில் பூம்புகார் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத இருவர் 200 ரூபாய்க்கு சில்லரை கேட்டதாகவும், சில்லரை கொடுத்துவிட்டு அமர்ந்தபோது, பணப்பெட்டியில் இருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 125 கிராம் நகைகள் திருட்டுபோனதும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று(ஏப்.26) அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தருமபுரியில் நேற்று (ஏப்.26) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தருமபுரி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 26, 2024

தருமபுரி நேற்றைய வெப்பநிலை விவரம்

image

தருமபுரியில் நேற்று (ஏப்.25) 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

அரூர்: மின்சாரக் கம்பியை மிதித்த பெண் பலி

image

அரூர் தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பிதுரை மனைவி அனிதா(38). இவர் நேற்று(ஏப்.25) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் திரும்பவில்லை. அவரை தேடி கணவர் சென்றபோது
ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். வனவிலங்குகள் வருவதை தடுக்க அமைத்த மின்கம்பியை அனிதா தெரியாமல் மிதித்து உயிரிழந்து தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

பாலக்கோடு அருகே ஆலமரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்!

image

பாலக்கோடு வட்டம், ஓசூர் நெடுஞ்சாலை சூடப்பட்டி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆலமரத்தில் மர்ம நபர்கள் நேற்று(ஏப்.25) தீ வைத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

News April 25, 2024

பாப்பிரெட்டிப்பட்டி: ரூ.43 லட்சத்திற்கு விற்பனை

image

கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள புழுதியூர் வார சந்தையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நேற்று கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இங்கு மாடு ஒன்று குறைந்தபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின; நேற்று மட்டும் ரூ.43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிதுள்ளனர் .

error: Content is protected !!