Dharmapuri

News April 29, 2024

தர்மபுரியில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். தினசரி வெப்பநிலை 105.5 தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்ப அலை வீசி வருவதால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

News April 29, 2024

போட்டித் தேர்வு நடைபெறுவது குறித்த ஆலோசனை

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தகுதி 4- (Group-IV) பணிகளுக்கான போட்டித் தேர்வு வருகின்ற ஜூன் 9 தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

தருமபுரி மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

தருமபுரி மாவட்ட நீதித்துறையில் 40 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

பென்னாகரம் பகுதியில் எம்எல்ஏ நேரில் ஆய்வு

image

பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகம் உள்ள கிராமங்களில் ஒரு சில கிராமங்களுக்கு நேற்று(28.4.2024), ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியாளர்களுடன் நேரில் சென்ற எம்எல்ஏ ஜி.கே.மணி போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசித்தார். அப்போது, சைக்கிளில் தண்ணீர் குடங்களுடன் வந்த பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக 6 கி.மீ. செல்ல வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

News April 28, 2024

ட்ரோன் பறக்க தடை 

image

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று(ஏப்-28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி தேர்தல் சம்மந்தமாக வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகாமையில் சுற்றியுள்ள பகுதிகளில் 2 கி.மீட்டர் வரை ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அப்பகுதிகளில் எந்த வித ட்ரோன் பறக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

தர்மபுரி அருகே கோர விபத்து

image

காரிமங்கலம் இன்று பெரியாம்பட்டி மேம்பாலம் அருகில் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணபிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15-35 வயது தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. 

News April 27, 2024

தர்மபுரியின் எழில்மிகு ஒகேனக்கல் அருவி!

image

தர்மபுரி மத்தியிலிருந்து 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஒகேனக்கல் அருவி. இது ஒரு அருவியை மட்டும் குறிக்காது. பல அருவிகளைக் குறிக்கும் ‘உகுநீர்க்கல்’ என்ற தமிழ் சொல்லே ஒகேனக்கல் என்றானது. இதன் கன்னட அர்த்தம் ‘புகையும் கல்பாறை’ ஆகும். பழங்காலத்தில் இதனைச் சுற்றியுள்ள பகுதியை தலைநீர் நாடு என்றழைத்தனர். கர்நாடகாவின் எல்லையில் இருப்பதால் கன்னட மொழி இந்த பகுதிகளில் ஆரம்பகாலத்திலிருந்து இங்கு பரவியுள்ளது.

News April 27, 2024

தருமபுரி: சில்லரை வாங்குவதுபோல் நடித்து திருட்டு!

image

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லுாரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் அப்பகுதியில் பூம்புகார் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத இருவர் 200 ரூபாய்க்கு சில்லரை கேட்டதாகவும், சில்லரை கொடுத்துவிட்டு அமர்ந்தபோது, பணப்பெட்டியில் இருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 125 கிராம் நகைகள் திருட்டுபோனதும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று(ஏப்.26) அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!