India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூகவலைத்தளங்களில் Chat செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உரையாடலை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற புகார் ஏதேனும் இருப்பினும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும், சைபர் கிரைம் தொடர்பு எண்; 1930 மூலம் புகார் அளிக்கலாம் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் (RJ) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இடைநிலை பட்டம் பெற்றதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/11/2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது-2024 வழங்கப்பட உள்ளது. இந்த விருது பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களுடன் 20/11/2024 க்குள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரம் மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்கள் மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஆ.மணி எம்.பி முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட ஆதி திராவிட நல குழுத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றுதான் மலை ஏற துவங்குகின்றனர். பஸ் நிறுத்தம் முதல் மலை அடிவாரம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.எனவே தீர்த்தமலை அடிவார சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் சின்னமிட்டஅள்ளி ஊ. ஒ. தொ பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் வழங்கினார். காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உதவி ஆசிரியர் புஷ்பராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற பள்ளி நிர்வாகத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை பொது விநியோகத்திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மழை பதிவான நிலை. தர்மபுரி – 7மி.மீ, பாலக்கோடு – 35.4மி.மீ, மாரண்டஹள்ளி- 21மி.மீ, பென்னாகரம் – 5.5மி.மீ, ஓகேனக்கல் – 1.6மி.மீ, அரூர் – 7.2மி.மீ, பாப்பிரெட்டிபட்டி – 28.4மி.மீ, மொரப்பூர் – 7மி.மீ. மொத்தம் -113.1மி.மீ. மாவட்ட சராசரி -12.57 மி.மீ மொத்தமாக பதிவாகியுள்ளது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC, MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள் tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.